யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பிரசவித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த விடயத்தினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து
சத்தியமூர்த்தி (Thangamuthu Sathiyamoorthy) தெரிவித்துள்ளார்.
குறித்த குழந்தைகள் நேற்றுமுன்தினம் (24-05-2025) பிறந்ததாகவும், குழந்தைகள் தற்போது விசேட
பாராமரிப்பு பகுதியில் வைத்து பராமரிக்கப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
குழந்தைகளும் தாயும் நலம்
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையை சேர்ந்த தம்பதியினருக்கே 3 ஆண் குழந்தைகளும் 2 பெண் குழந்தைகளும் என ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன.

மேலும் குழந்தைகளும் தாயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/bX9aUziUCjc

