முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். பல்கலையின் பொன்விழா நிகழ்வுகள்: விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 50 ஆவது ஆண்டு பூர்த்தியைத் தொடர்ந்து பொன்விழா
நிகழ்வுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26,27,28 ஆகிய தினங்களில்
முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பழைய மாணவர் சங்கத்தின்
தலைவர் இமானுவேல் ஆனோல்ட் அறிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வை பல்கலைக்கழகத்தின் கலைபீடத்தில்
கல்வி கற்றபழைய மாணவர்கள் ஒன்றிணைந்து விழா
நிகழ்வினை நடாத்த தீர்மானித்துள்ளனர்.

இதற்காக உருவாக்கப்பட்ட ஏற்பாட்டுக்
குழுவின் ஊடக சந்திப்பு நேற்றைய தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்
பெற்றது.

பொன்விழா நிகழ்வு

பொன்விழா நிகழ்விற்கு புலத்திலும், நாட்டிலும் உள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக
பழைய மாணவர்கள், தொழில் துறை சார்ந்தவர்கள், புலம்பெயர் நாட்டில் வசித்து
வருபவர்கள் அனைவரையும் வருகை தருமாறு ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி முதல் நாள் நிகழ்வு காலை 09 மணிக்கு
ஆரம்பமாகவுள்ளது.
இதன்போது பொன் விழா தொடர்பான நூல் ஒன்று வெளியீடு செய்யப்படவுள்ளது.

அதனைத்
தொடர்ந்து கலைப்பீடத்தைச் சேர்ந்த மூத்த இளைப்பாறிய விரிவுரையாளர்கள்
கெளரவிக்கப்படவுள்ளனர்.

விளையாட்டுப் போட்டி

இரண்டாம் நாள் நிகழ்வாக கலைப்பீடத்தைச் சேர்ந்த பழைய மாணவர்களின் விளையாட்டுப்
போட்டி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

யாழ். பல்கலையின் பொன்விழா நிகழ்வுகள்: விடுக்கப்பட்டுள்ள அழைப்பு | 50Th Anniversary Of The University Of Jaffna

இதின் மென்பந்து, கரப்பந்து, உள்ளிட்ட
விளையாட்டுக்களுக்கும் பாரம்பரிய உள்ளக, வெளியக விளையாட்டுகளும் இடம்பெறவுள்ளன.

இறுதி நாள் நிகழ்வாக பல்கலைக்கழக கலைப்பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள், பழைய
மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து குருதிக் கொடை வழங்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அனைவருக்குமான இராப்போசன நிகழ்வும்
ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.