நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் 1755
குடும்பங்களை சேர்ந்த 543 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட
அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என் சூரியராஜா
தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் வேலணை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து
பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
அதுபோல சங்கானை பிரதேச செயலர் பிரிவில் இரு குடும்பத்தைச் 09பேர்
பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடுகள் இரண்டும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
பாதிப்பு
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த மூவர்
பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 135பேர்
பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடும், இரண்டு அடிப்படை கட்டமைப்புகளும்
சேதமடைந்துள்ளன.
இரண்டு பாதுகாப்பு நிலையங்களில் 35 குடும்பங்களைச் சேர்ந்த
123பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருவர்
பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
மேலும், காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 54பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் 112 குடும்பங்களைச் சேர்ந்த 336பேர்
பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.