கடற்படையினரால் இலங்கையின் மேற்கு திசையின் ஆழ்கடலில் முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது, 165 கோடி
ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் 6 சந்தேகநபர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி, சந்தேகநபர்கள் பல நாள் ஹெரோயின் கடத்தலுக்குப் பயன்படுத்திய கடற்றொழில் படகுடன் நேற்று (15.11.2024) காலி துறைமுகத்துக்கு அழைத்து
வரப்பட்டனர்.
காலி துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்ட படகு மேலதிக சோதனைகளுக்கு
உட்படுத்தப்பட்ட போதே அதிலிருந்து 165 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 66
கிலோ 840 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்று கடற்படை ஊடகப்
பிரிவு தெரிவித்துள்ளது.
மேலதிக விசாரணைகள்
இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18 – 34 வயதுக்கு உட்பட்ட மிரிஸ்ஸ
பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
இவர்கள் கைப்பற்றப்பட்ட படகு மற்றும்
போதைப்பொருளுடன் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்
பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.