ஹோமாகம(Homagama) – மாகம்மன பிரதேசத்தில் அமைந்துள்ள சொகுசு தொடர்மாடி குடியிருப்பில் உள்ள வீடொன்றில் பேஸ்புக் களியாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில் ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஹதுடுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று (12) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேக நபர்களிடமிருந்து குஷ், ஹேஷ் மற்றும் வெளிநாட்டு சிகரட்டுகள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
இந்த பேஸ்புக் களியாட்டத்தில் இரண்டு யுவதிகளும் ஆறு இளைஞர்களும் கலந்துகொண்டுள்ள நிலையில் போதைப்பொருள் வைத்திருந்த ஆறு இளைஞர்களே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.