முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 7 கடற்றொழிலாளர்கள் கைது..!

இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற ஒரு படகையும்
அதிலிருந்த ஏழு கடற்றொழிலாளர்களையும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை
கடற்படையினர் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.

சிறைபிடிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்ய
வேண்டும் என கடற்றொழிலாளர்களின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிறைபிடிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள்

இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று சனிக்கிழமை காலை
450இற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் சென்றனர்.

கடற்றொழிலாளர்கள் இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் இலங்கை காங்கேசன்துறை வடமேற்கு
கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தங்கச்சி மடத்தைச் சேர்ந்தவருக்கு சொந்தமான விசைப்படகையும் அதிலிருந்த ஏழு கடற்றொழிலாளர்fளை,
எல்லை தாண்டியமைக்காக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 7 கடற்றொழிலாளர்கள் கைது..! | 7 Fishermen Arrested For Cross Border Fishing

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களையும் படகையும் இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை
கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணை முடிந்த பின்னர் கடற்றொழிலாளர்களை படகுடன் மயிலிட்டி துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட
உள்ளனர்.

ஒப்படைக்கப்படும் கடற்றொழிலாளர்களை இன்று மாலை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.

சிறைபிடிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வேண்டும் என
கடற்றொழிலாளர்களின் உறவினர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை முன்வைத்துள்ளனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.