முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொலிஸ் அதிகாரியை தாக்கிய 7 பேர் கைது

அம்பாறை (Ampara) – பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் விசாரணை மேற்கொண்டிருந்த நேரத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெரிய நீலாவணை- பாண்டிருப்பு, திருவள்ளுவர் வீதியில்
இடம்பெற்ற இரு சாரார் முறுகல் தொடர்பில் நேற்று (27) விசாரணை
மேற்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி மீது குறித்த தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த தாக்குதலினால் நிலைகுலைந்த குறித்த பொலிஸ் அதிகாரி
காயமடைந்த நிலையில் மருதமுனை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரி விசாரணை

பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பல்வேறு குற்றத்தடுப்பு
பிரிவில் கடந்த வியாழக்கிழமை(26) முறைப்பாடு ஒன்று வழங்கப்பட்டிருந்தது.

பொலிஸ் அதிகாரியை தாக்கிய 7 பேர் கைது | 7 People Arrested For Assaulting A Police Officer

வழமை
போன்று அந்த முறைப்பாட்டை ஆராய இரு தரப்பினரை வரவழைத்த பொலிஸ் அதிகாரி விசாரணை
விடயங்களை ஆராய்ந்து கொண்டிருந்தார்.

குறித்த விசாரணை பொலிஸ் அதிகாரி
முன்னிலையில் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது முறைப்பாட்டாளர் பக்கமாக
நின்ற பெண் திடீரென தனது செருப்பினை கழற்றி மறுமுனையில் இருந்த எதிராளியை
நோக்கி பல முறை தாக்கியுள்ளார்.

இதன்போது உடனடியாக செயற்பட்ட குறித்த பொலிஸ்
அதிகாரி குறித்த தாக்குதலை நிறுத்துமாறு கோரி சமரசப்படுத்த
முயற்சித்துள்ளார். இந்நிலையில் பொலிஸ் அதிகாரியை திடீரென குழுவாக இணைந்து
பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைக்காக அழைக்கப்பட்டவர்கள்
தாக்கியுள்ளனர்.

விசாரணை

இதன்போது, குறித்த பொலிஸ் அதிகாரி
காயமடைந்த நிலையில் அருகில் உள்ள மருதமுனை பிரதேச வைத்தியசாலைக்கு
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பொலிஸ் அதிகாரியை தாக்கிய 7 பேர் கைது | 7 People Arrested For Assaulting A Police Officer

மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக
சந்தேகத்தின் அடிப்படையில் பெண் மற்றும் ஆண் சந்தேக நபர்கள் 7 பேர் இதுவரை
கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கடமைக்கு இடையூறு செய்தமை
சமாதானத்திற்கு குந்தகம் விளைவித்தமை வன்முறையை தூண்டியமை உள்ளிட்ட
குற்றச்சாட்டின் அடிப்படையில் எஞ்சிய சந்தேக நபர்களை கைது செய்ய பெரிய நீலாவணை
பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம்
தொடர்பிலான பூரண விசாரணைகளை கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்
ரீ. எச். டி .எம். எல். புத்திக மேற்கொண்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.