முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பில் தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்த இருவருக்கு 76 ஆயிரம் ரூபா அபதாரம்

மட்டக்களப்பில் போத்தலில் அடைத்து தரமற்ற நெய் விற்பனை செய்த நிறுவன முகவர்
மற்றும் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்த
தரமற்ற சத்துமா நிறுவன உரிமையாளர் ஆகிய இருவரையும் 76 ஆயிரம் ரூபா தண்டப்பணம்
செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு நேற்று(11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கை விசாரணை

மட்டக்களப்பு – வலையிறவு பிரதேசத்திலுள்ள கடை ஒன்றில் இதயம்
ஸ்ரோர் என்ற பெயரிட்ட போத்தலில் அடைத்து விற்பனை செய்து வந்த நெய்யை கடந்த
மாதம் புளியந்தீவு பிரதேச பொதுசுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளனர்.

மட்டக்களப்பில் தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்த இருவருக்கு 76 ஆயிரம் ரூபா அபதாரம் | 76000Rs Fine Who Sold Substandard Food Items Batti

இதேவேளை, மட்டு. கோட்டமுனை பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டு பொலித்தீனில்
அடைத்து விற்பனை செய்யப்பட்டுவரும் கர்ப்பிணி தாய்மார் மற்றும் ஆறுமாத
குழந்தைகளுக்கான சத்துமா தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டிற்கடைய அதனை கைப்பற்றிய
பொது சுகாதரா பரிசோதகர்கள் குறித்த இரண்டு பொருட்களையும் அரச இராசாயன
பகுப்பாய்வுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இதில், நெய்யில் கலக்கப்பட்டிருந்த மஞ்சள் நிறமான மற்றனிக் ஜெலோ என்ற மனித
பாவனைக்கு உதவாத தரமற்ற மஞ்சள் பதார்த்தம் கலக்கப்பட்டுள்ளதாகவும்
சத்துமாவில் அதிகமான அல்ரோஸ் டொக்கினிக் என்ற பதார்தம் அதிகளவு
கலக்கப்பட்டுள்ளதாகவும் இந்த இரு பொருட்களும் மனித பாவணைக்கு தரமற்றது என
அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, காத்தான்குடியைச் சேர்ந்த நெய் விற்பனை முகவர் மற்றும் சத்துமா
உற்பத்தி கம்பனி உரிமையாளர் இருவருக்கும் எதிராக தனிதனியாக நேற்று(11)
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள்
வழக்குதாக்குதல் செய்துள்ளனர்.

மட்டக்களப்பில் தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்த இருவருக்கு 76 ஆயிரம் ரூபா அபதாரம் | 76000Rs Fine Who Sold Substandard Food Items Batti

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் நெய் விற்பனை முகவரை 50
ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் சத்துமா உற்பத்தி உரிமையாளரை 26
ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் உத்தரவிட்டடுள்ளார்.

அத்துடன், குறித்த காலங்களில் தயாரித்து விற்பனை செய்துவரும் இரு பொருட்களையும் வர்த்தக நிலையங்களில்
இருந்து அகற்றி அழிக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.