2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய 80 வயது முதியவர் ஒருவர் கணித வினாத்தாள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசுவதற்கு கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரியவை சந்திக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கணித வினாத்தாள்கள்
ஊடகங்களுக்குப் பேசிய அந்த முதியவர், முன்னர், கலை, வணிகம் மற்றும் பொறியியல் துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தனித்தனி கணித வினாத்தாள்கள் வழங்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், தற்போது அனைத்து மாணவர்களுக்கும் பொறியாளர்களுக்காக வழங்கப்படவேண்டிய வினாத்தாள்கள் வழங்கப்படுவதாகவும் இது நியாயமற்றது என்றும் பல ஆண்டுகளாக நடந்து வருகிறதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வினாத்தாள் வழங்கும் முறை
இந்த நிலையில், பொதுவான வினாத்தாளுக்குப் பதிலாக, பாடப் பிரிவுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கணித வினாத்தாள்களை வழங்கும் முறையை மீண்டும் தொடங்குமாறு அந்த முதியவர் கல்வி அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கட்டணம் செலுத்தப்படும் மேலதிக வகுப்புகளை ஒழிக்க வேண்டும் என்றும், இது தொடர்பான ஆசிரியர்களுக்கு அதிக ஊதியம் வழங்கி அவர்களை பாடசாலைகளில் கல்வி கற்பிக்க நியமிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.