இலங்கையின் முக்கிய சிறைச்சாலைகளில் மரண தண்டனைக் கைதிகள் 826 பேரளவில் தற்போதைக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
மனிதப் படுகொலை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய வழக்குகளில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த 826 கைதிகளில் 805 பேர் ஆண் கைதிகள் என்றும் 21 பேர் பெண் கைதிகள் என்றும் தெரியவந்துள்ளது.

மரண தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு
இவர்களில் 393 பேர் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்துள்ளனர்.
குறித்த கைதிகளின் உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக நாளொன்றுக்கு சுமார் 1400 ரூபா வரையில் செலவிடப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளில் பெரும்பாலானவர்கள் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் என்றும் சிறைச்சாலைகள் திணைக்கள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

