முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்தியாவின் போன்பே யுபிஐ கட்டண செயல்முறை இலங்கையில் அறிமுகம்

Courtesy: Sivaa Mayuri

இந்திய fintech நிறுவனத்தின் போன்பே யுபிஐ (PhonePe Unified Payments Interface) கட்டணமுறை இலங்கையில் (Sri lanka) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் நேற்று(15.05.2024) நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா (Santosh Jha) ஆகியோர் கலந்து கொண்டு அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்றைய தினத்திலிருந்து லங்காபேயுடன் இணைந்து இலங்கையில் UPI  கட்டணத்தை ஏற்றுக்கொள்வதைச் செயற்படுத்தியதாக PhonePe அறிவித்துள்ளது.

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்: ஆரம்பமாகும் பொதுஜன பெரமுனவின் முதலாவது பொதுக்கூட்டம்

தொழில்நுட்ப சேவை

இதன்மூலம் இலங்கைக்கு வருகை தரும் தமது செயலி பயனர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள LankaPayQR வணிகர்கள் மூலம் UPIஐப் பயன்படுத்தி பணம் செலுத்த முடியும் என்று  போன்பே அறிவித்துள்ளது.

இந்தியாவின் போன்பே யுபிஐ கட்டண செயல்முறை இலங்கையில் அறிமுகம் | Launch India Phonepay Upi Payment Process Sl

அத்துடன் PhonePe பயனர்கள் ரொக்கத்தை எடுத்துச் செல்லாமல் அல்லது நாணய மாற்றங்களைக் கணக்கிடாமல் பாதுகாப்பான மற்றும் விரைவான பணம் செலுத்த LankaPayQR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம் என்றும் PhonePe அறிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரியில், இந்தியாவின் உடனடி கட்டண தொழில்நுட்ப சேவையான யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் UPI இலங்கை மற்றும் மொரீசியஸில் ஆரம்பிக்கப்பட்டது.

வேகமான கட்டண முறை

இது தொடர்பான காணொளி மாநாட்டு நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்தியாவின் போன்பே யுபிஐ கட்டண செயல்முறை இலங்கையில் அறிமுகம் | Launch India Phonepay Upi Payment Process Sl

UPI  என்பது இந்தியாவின் மொபைல் அடிப்படையிலான வேகமான கட்டண முறையாகும். இது வாடிக்கையாளர் உருவாக்கிய விர்ச்சுவல் பேமென்ட் முகவரியை (VPA) பயன்படுத்தி 24 மணிநேரமும் உடனடியாக பணம் செலுத்த வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது. 

தென்னிலங்கையில் உயிரிழந்த பெண்ணை உயிர் பெறச்செய்த கிராம உத்தியோகத்தர்

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் மைதான பாதையை விடுவிக்க டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்