உடல் தன்மைக்கேற்பவும் உடலின் தட்ப வெப்ப தன்மைக்கும் இருப்பிடத்திற்கேற்பவும் தான் முடி வளர்ச்சி கருமை நிறம் அடர்த்தி, நீளமான கூந்தல் அமைகிறது.
பொதுவாகவே அனைவருக்கும் நீண்ட மற்றும் அடர்த்தியான கூந்தல் என்றால் மிகவும் பிடிக்கும் அதற்கு தேவையான ஊட்டசத்துகளையும் முறையான கவனிப்பையும் வழங்க வேண்டும்.
பொதுவாகவே தலை முடி எப்போதும் அடிப்பகுதியிலேயே வளரும். எனவே முடியின் நுனிப்பகுதியை சரியான சம அளவில் வெட்டி, பராமரித்து வந்தால், முடி சீராகவும், நீளமாகவும் வளரும்.
சுத்தமான தேங்காய் எண்ணெய்
சுத்தமான தேங்காய் எண்ணெயுடன், வைட்டமின் E ஆயில் 10/3 என்ற பங்கு அளவில் கலந்து, பூசிவர முடி வளர்ச்சி அடையும்.
தேங்காய் பாலுடன், பச்சையான கற்பூரவல்லி இலை சேர்த்து, வெயிலில் காயவைத்து முடியில் பூசினால், முடி அடர்த்தியாக வளரும்
கரிசலாங்கண்ணி, ஆவாரம்பூ இரண்டையும் அரைத்து உலர செய்து பிறகு, எண்ணெயில் கலந்து காயவைத்து, தலைக்கு தேய்த்து குளித்தால், உடல் சூட்டை தனித்து குளுமை அடையும், முடியும் உதிராது.
முட்டையின் வெள்ளைக்கரு
முட்டையின் வெள்ளைக்கரு, சிறுவால் மிளகு இரண்டையும் அரைத்து தலைக்கு தேய்த்து குளித்தால், முடி வேருடன் கொட்டுவதை தடுக்கும்.
காய்ந்த செம்பருத்தி பூ, ஆவாரம்பூ, மருதாணி பூ, எல்லாவற்றையும் வெயில் படாமல் நிழலில் உலர்த்தி, சிறு துணியில் கட்டி தேங்காய் எண்ணெயில் போட்டு உபயோகித்துவந்தால், கடுமையான வெயில் காலத்தில் ஏற்படும் முடி உதிர்வை தடுத்து, மூல சூடு அடங்கும். வேப்பம்பூ, மருதாணி பூ, இரண்டையும் வெயில் படாமல் காயவைத்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து தலைக்கு தேய்த்துவர, வெப்பத்தால் தலையில் ஏற்படும் பருக்கள், மற்றும் கட்டிகள் மறையும்.