அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.
ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.
இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய் – 200 மில்லி
- வெந்தயம் – 50 கிராம்
- செம்பருத்தி பூ – ஒரு கைப்பிடி அளவு
- கறிவேப்பிலை – சிறிதளவு
- வெட்டி வேர் – சிறிதளவு

பயன்படுத்தும் முறை
- அடுப்பில் கடாயை வைத்து 200 மில்லி தேங்காய் எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் 50 கிராம் வெந்தயம்,ஒரு கைப்பிடி அளவு செம்பருத்தி பூ மற்றும் சிறிதளவு கறிவேப்பிலையை சேர்த்து எண்ணெய்யை நன்றாக கொதிக்க வைக்கவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி எண்ணெய்யை சிறிது நேரம் ஆறவைத்து ஒரு டம்ளரில் எண்ணெய்யை எடுத்து கொள்ளவும்.
- இதனுடன் சிறிதளவு வெட்டி வேரை எண்ணெயில் போட்டு ஊறவைக்கவும்.
- இதில் இருந்து சிறிதளவு எண்ணெய்யை எடுத்து தலையில் தேய்த்து வந்தால் மூடி அடர்த்தியாக வளரும்.
- மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.

