பெண்கள் எப்போதும் முகத்தை பொலிவுடனும், அழகாகவும் வைத்திருக்க விரும்புவார்கள்.இதற்காக தற்காலிக தீர்வுகளை செய்வதன் மூலம் எதிர்காலத்தில் விளைவுகள் ஏற்படலாம்.
எனவே இயற்கையான முறையை பின்பற்றுவதன் மூலம் நிரந்தரமான தீர்வை பெறலாம்.கடலை மாவு மற்றும் பன்னீர், மஞ்சள் என்பவை இயற்கையாகவே முகத்திற்கு பள பளப்பை தரக்கூடியவை.
மஞ்சளானது முகத்திற்கு பொலிவை தருவதுடன் கருமை நிறத்தையும் போக்ககூடியது.எனவே இந்த பொருட்களை வைத்து எவ்வாறு இயற்கையான அழகான பொலிவான முகத்தை எவ்வாறு பெறலாம் என பார்க்கலாம்.
பளபளப்பான முகம்
கடலை மாவு, மஞ்சள், எலுமிச்சை சாறு, பன்னீர், இவையனைத்தையும் சேர்த்து நன்றாக கலவையாக கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் நன்றாக தடவி, 20 நிமிடங்கள் வைத்து இருக்க வேண்டும்.
அதன் பிறகு சுத்தமான நீரினால் கழுவ வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் சிறந்த பலனை அடையலாம்.
சிலருக்கு முகத்தில் உள்ள துளைகள்இருக்கும். இதற்கு உளுத்தம் மாவு, மஞ்சள் சேர்த்து சிறிது பால் சேர்த்து நன்றாக கலந்து தடவி வர சரியாகும்.