இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் (Ajit Doval) இன்று (29) வியாழக்கிழமை இலங்கையை வந்தடைந்துள்ளார்.
நாளை (30) நடைபெறவுள்ள கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் (CSC) பங்கேற்பதற்காகவே கொழும்பிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி அவர் அரசியல் தலைவர்கள் பலரை சந்திக்க உள்ளதாகவும் இலங்கையின் சமகால மற்றும் எதிர்கால அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல்
இதேவேளை இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அஜித் தோவலின் இந்த பயணம் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாநாட்டை முடித்துக் கொண்டு நாளை மாலை கொழும்பில் இருந்து புறப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.