அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள கிறிஸ்தவ பாடசாலையில் மாணவி ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், அறுவர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவியும், ஆசிரியர் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.
இருவரின் நிலை கவலைக்கிடம்
மேலும், காயமடைந்த அறுவரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
15 வயதுடைய Natalie Rupnow என்ற குறித்த மாணவி தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலை மேற்கொண்ட மாணவிக்கு துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பான விபரம் தெரியவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.