கொழும்பில் ரயிலில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டு பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் விசாரணை
மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.