சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்களை விளாசிய இந்திய வீரர்களின் பட்டியலில் ரோஹித் சர்மா (Rohit Sharma ) மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
முன்னதாக குறித்த பட்டியலில் 48 சதங்களுடன் ராகுல் டிராவிட் மூன்றாவது இடத்திலிருந்த நிலையில், அவரை பின் தள்ளி ரோஹித் சர்மா முன்னேறியுள்ளார்.
அதிக சதம் விளாசிய இந்திய வீரர்
இந்த பட்டியலில் 100 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும், 81 சதங்களுடன் விராட் கோலி இரண்டாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச போட்டிகளில் அதிக சதம் விளாசிய இந்திய வீரர்கள்
1. சச்சின் – 100
2. விராட் கோலி – 81
3. ரோகித் – 49
4. டிராவிட் – 48
5. சேவாக் – 38