சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் விபத்துக்ளைக் குறைக்க,
தமது பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துமாறு பெற்றோர்களையும்
பெரியவர்களையும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் சிறுவர் சம்பந்தப்பட்ட விபத்துகளின்
எண்ணிக்கை ஆண்டுதோறும் கடுமையாக அதிகரிப்பதாக சீமாட்டி ரிட்ஜே சிறுவர்
மருத்துவமனையின் மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா கூறியுள்ளார்.
பட்டாசு தொடர்பான சம்பவங்கள் மற்றும் வீதி விபத்துகள் காரணமாக பண்டிகைக்
காலத்தில் ஏராளமான சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று
அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிக கவனம்
எனவே, பெற்றோர்களும் பாதுகாவலர்களும் எல்லா நேரங்களிலும், சிறுவர்கள்
தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும
இதேவேளை குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் வீதி விபத்துகளின் எண்ணிக்கை
அதிகரிப்பதையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
இதற்கிடையில், இந்த காலகட்டத்தில் கணிசமான எண்ணிக்கையிலான சிறுவர்கள்
வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுவதாக தீபால் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
பெற்றோர்கள் தங்கள் சிறுவர்கள்; எந்த உணவை உட்கொள்கிறார்கள் என்பதில் கவனமாக
இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் வெப்பமான வானிலை தொடர்ந்து வருவதால், புத்தாண்டு விளையாட்டுகளில்
பங்கேற்கும் சிறுவர்கள் நீரிழப்பைத் தடுக்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை
உறுதி செய்ய வேண்டும் என்றும் தீபால் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.
தோல் நோய்கள் வராமல் தடுக்க, சிறுவர்கள், அடிக்கடி நீண்ட நேரம் குளிக்க
அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.