உலகத்தின் ஒட்டுமொத்த பார்வையும் தற்போது இந்தியா-பாகிஸ்தான் மீது திரும்பியுள்ளது.
பாகிஸ்தான் இந்தியாவை சீண்டிப்பார்ப்பதாகவே பார்க்கப்படுகின்றது.
கடந்த 22ஆம் திகதி பஹல்ஹாம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தை தொடர்ந்து அதற்கு பின்னதாக பாகிஸ்தான் இராணுவம் இந்தியாவின் எல்லை தாண்டி உள்நுழைந்து 34 இடங்களில் துப்பாக்கிசூடு சம்பவங்களை நடாத்தியுள்ளது.
தன்னை ஒரு வல்லரசாக நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கும் நிலையில் பாகிஸ்தான் மீது வலிந்து தாக்குமா என்ற கேள்வியெழுந்துள்ளது.
ஆனால் இந்த இந்தியா-பாகிஸ்தான் போரை ஆதரித்து வலுப்படுத்த வேண்டிய தேவை சீனாவுக்கு உள்ளது.
இதேவேளை, கடந்த வாரம் வரை பாகிஸ்தானுடன் தொடர்பை பேணிவந்த அமெரிக்கா தற்போது இந்தியாவோடு முழுமையாக ஆதரவாக உள்ளது.
இந்தியாவை பயன்படுத்தி சீனாவிற்கெதிரான நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா குறியாக உள்ளது.
இது இவ்வாறிருக்க இந்தியாவிற்கு எதிரான தனது நிலைபாட்டை பாகிஸ்தானுக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் சீனா வெளிகாட்டுகின்றது எனலாம்…
இந்த விடயங்களை ஆராய்கின்றது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி….

