முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை – இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது வரலாற்று தவறு : குமார் குணரட்ணம்

இலங்கை – இந்திய பாதுகாப்பு உடன்படிக்கையில் இலங்கை கைசாத்திட்டால் அது வரலாற்று தவறாக அமையும் முன்னிலை சோசலிச கட்சியின் குமார் குணரட்ணம் (Premakumar Gunaratnam) தெரிவித்துள்ளார்.

ஜேவிபியின் (JVP) முதலாவது கிளர்ச்சி இடம்பெற்ற ஏப்ரல் ஐந்தாம் திகதியன்று ஜேவிபி அரசாங்கம் இந்தியாவுடன் (India) பாதுகாப்பு உடன்படிக்கையில் கைசாத்திடுகின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கும் (Sri Lanka) இந்தியாவுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பிரதமரின் இலங்கை விஜயம்

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் இலங்கைக்கு எதிர்காலத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும், பாதுகாப்பு உடன்படிக்கை எரிசக்திதுறை சம்பந்தமான உடன்படிக்கை உட்பட பல உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது வரலாற்று தவறு : குமார் குணரட்ணம் | Agreement Signed On The Day Of The Jvp Uprising

மோடி ஜயஸ்ரீமகாபோதிக்கு விஜயம் மேற்கொள்வார், மன்னார் மருத்துவமனைக்கு நிதியை அன்பளிப்பாக வழங்குவார் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மோடி இதன் மூலம் என்ன எதிர்பார்க்கின்றார், அவர் இலங்கையின் துறைமுகங்களை திருகோணமலை எண்ணெய் குதத்தை இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க விரும்புகின்றார்.

இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்து சமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கான போட்டியில் ஈடுபட்டுள்ளன, இது இந்து சமுத்திரத்தில் இன்று காணப்படும் புவிசார் அரசியல் நிலவரம் தொடர்பானது.

நாட்டிற்கு துரோகம் இழைத்தல்

உத்தேச பாதுகாப்பு உடன்படிக்கையில் இலங்கை கைசாத்திட்டால் அது புவிசார் அரசியலில் தேவையற்ற விதத்தில் சிக்குப்படும்.

இந்த உடன்படிக்கையில் கைசாத்திடுவது வரலாற்று தவறாக அமையும்.

இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது வரலாற்று தவறு : குமார் குணரட்ணம் | Agreement Signed On The Day Of The Jvp Uprising

சமீபகாலத்தில் உலகின் எந்த நாடும் வேறு ஒரு நாட்டுடன் பாதுகாப்பு உடன்படிக்கையில் கைசாத்திடவில்லை, ஆனால் இலங்கை பாதுகாப்பு தொடர்பில் சில நாடுகளுடன் புரிந்துணர்வினை ஏற்படுத்தியது, இன்று கைசாத்திடப்படவுள்ள உடன்படிக்கையின் பின்னால் அரசியலே உள்ளது.

ராஜபக்சாக்களோ அல்லது ரணில் விக்ரமசிங்கவோ (Ranil Wickremesinghe) நாட்டிற்கு துரோகம் இழைப்பது புதிய விடயமல்ல.

மாறாக இவ்வாறான உடன்படிக்கைகளிற்கு எதிராக வீதியில் இறங்கிய அரசாங்கம் இன்று நாட்டை ஆட்சி செய்கின்றது.

ஜேவிபி தன்னை மாற்றிக்கொண்டு இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கையில் கைசாத்திடுகின்றது. ஜேவிபி தனது பழைய கொள்கைகளை கைவிட்டுவிட்டது போல தோன்றுகின்றது.

ஜேவிபியின் கிளர்ச்சி 

இது ஜேவிபியின் உறுப்பினர்களின் மனச்சாட்சியுடன் தொடர்புடைய விடயம், இந்த அரசாங்கம் சோசலிஸ ஆட்சிமுறையை முன்னெடுக்கப்போவதாக தெரிவித்தது.

ஆனால் கல்வி, வரி போன்றவை தனியார் மயப்படுத்தப்படுவது குறித்து அக்கறையற்றதாக காணப்படுகின்றது.

இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது வரலாற்று தவறு : குமார் குணரட்ணம் | Agreement Signed On The Day Of The Jvp Uprising

ஜேவிபியின் நீண்டகால உறுப்பினர்களும் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவளித்தவர்களும் இந்த தருணத்தில் வெறும் பார்வையாளர்களாக இருக்கப்போகின்றார்களா என நாங்கள் கேள்வி எழுப்புகின்றோம்.

ஒப்பந்தங்களில் கைசாத்திட்டு இவற்றை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதே அவரின் விஜயத்தின் நோக்கம்

1971 ஏப்ரல் ஐந்தாம் திகதி ஜேவிபியின் கிளர்ச்சி இடம்பெற்ற தினத்தில் இந்த ஒப்பந்தங்கள் கைசாத்திடப்படுவது விதியின் திருப்பம்“ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.