வவுனியாவில் வேட்பாளர் ஒருவர் தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் நேற்று (05) முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டை அவர் நேற்றையதினம் (5) வவுனியா நிலையத்தில் பதிவு செய்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
வவுனியா மாநகரசபையில், வைரவபுளியங்குளம் வட்டாரத்தில் போட்டியிடும் ஐக்கிய
மக்கள் சக்தியின் வேட்பாளர் ஒருவரே தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறையிட்டுள்ளார்.

இது தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

