முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சி- கண்டாவளை பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி- கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட கல்மடு நகர் ரங்கன்
குடியிருப்பு பிரதான வீதியை புனரமைத்துத் தருவதாக வழங்கிய வாக்குறுதிகள்
நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்து பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை
முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டமானது இன்றைய தினம் (19) கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்றுள்ளது.

மேற்குறித்த பகுதியில் 350இற்க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வரும்
நிலையில் இக்கிராமத்திற்கான பிரதான வீதி மற்றும் சேதமடைந்த பாலம் என்பவற்றை
புனரமைத்து தருமாறு தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு காலத்துக்கு
காலம் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதும் அந்த வீதிகள் இதுவரை
புனரமைக்கப்படவில்லை.

வீதி சீரின்மை

இதனால் குறித்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், கர்ப்பவதிகள் என பலரும் பல்வேறு அசௌகரிகளுக்கு மத்தியில்
தங்களுடைய போக்குவரத்துக்களை மேற்கொண்டு வருகின்றதாக குறிப்பிட்டுள்ளனர்.

கிளிநொச்சி- கண்டாவளை பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் | Kilinochchi People Attention Protest

குறித்த பிரதேசத்திற்கு பாடசாலை பேருந்து சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்ட போதும்
வீதி சீரின்மையால் அது இடம்பெறுவதில்லை எனவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டி
உள்ளனர்.

புனரமைப்பதற்குரிய நடவடிக்கை

இவ்விடயம் தொடர்பாக இன்றைய தினம்
கண்டாவளைப் பிரதேச செயலாளரை பாதிக்கப்பட்ட மக்கள் நேரில் சென்று வினவிய போது
சம்பந்தப்பட்ட திணைக்களமான வீதி அபிவிருத்தி அதிகார சபையினருக்கு ஏற்கனவே
தெரிவித்துள்ளதாகவும் இன்றும் மக்களின் போராட்டம் தொடர்பாகவும்
தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

கிளிநொச்சி- கண்டாவளை பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் | Kilinochchi People Attention Protest

தற்பொழுது பயன்பாட்டில் உள்ள
மாற்று வீதி கடந்த 2016 ஆம் ஆண்டு தொடக்கம் தற்பொழுது வரை மக்கள் பயன்படுத்தி
வருவதன் காரணமாக அவ்வீதியை மக்களின் பாவனைக்காக வழங்குவதற்கு நடவடிக்கை
எடுக்கப்படும் எனவும் 2016 ஆம் ஆண்டு காலப் பகுதியின் வரைபடத்தில்
பாதையுள்ளதாகவும் எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி
உரிய பாதையினை மக்கள் பாவனைக்கு வழங்கி புனரமைப்பதற்குரிய நடவடிக்கை
முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.