வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை நேர பிரச்சினையை தீர்க்க
வலியுறுத்தி இ.போ.சபை கிளிநொச்சிசாலை ஊழியர்கள்
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி சாலையிலிருந்து கிளிநொச்சி
மாவட்டத்திற்கான எந்த சேவையும் இடம்பெறவில்லை என தெரியவருகிறது.
நடவடிக்கை எடுக்கவில்லை
இதன்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகையில்,
தொடர்ச்சியாக குறித்த பகுதிகளில் நேரம் தொடர்பாக தனியார் பேருந்துகளுடன்
பிரச்சினை ஏற்படுகிறது.
குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கு வடமாகாண
வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.




