முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருகோணமலையில் 3071 ஏக்கர் நிலத்தை இந்தியாவுக்கு வழங்க தயாராகும் அரசாங்கம்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, திருகோணமலை உட்பட பல பகுதிகளில் 3071 ஏக்கர் நிலத்தை இந்திய முதலீட்டாளர்களுக்கு வழங்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய மக்கள் போராட்ட இயக்க நிர்வாக உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் கொழும்பின் அளவிலான 620 சதுர கிலோமீட்டர் பரப்பளவு இந்தியாவின் பொருளாதார மண்டலமாக நியமிக்கப்பட்டுள்ளதாக முதலிகே மேலும் கூறியுள்ளார்.

திருகோணமலையிலிருந்து மன்னார் வரையிலான அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டுதல் ஆகியவை முன்மொழியப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்களில் அடங்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நில ஒதுக்கீடு

முதலிகே பின்வரும், நில ஒதுக்கீடுகளை இதன்போது  மேற்கோள் காட்டியுள்ளார்.

திருகோணமலை எண்ணெய் தொட்டி வளாகம்:

851 ஏக்கர், இதில் 62 எண்ணெய் தொட்டிகள் ஏற்கனவே இந்தியாவிற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.

திருகோணமலையில் 3071 ஏக்கர் நிலத்தை இந்தியாவுக்கு வழங்க தயாராகும் அரசாங்கம் | Govt Preparing Hand Over Land Trinco To India

சம்பூர் மின் உற்பத்தி நிலைய பரப்பளவு: 831 ஏக்கர்.

சம்பூர் பொருளாதார மண்டலம்:  900 ஏக்கருக்கு அதிகம்.

குச்சவெளி சுரங்கத்திற்காக 100 ஏக்கர்.

முத்துநகர்: மொத்தம் 900 ஏக்கர், இதில் 800 ஏக்கர் சூரிய சக்தி பேனல் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை துறைமுகப் பகுதி

மேலும், கொழும்பு துறைமுகம் மற்றும் திருகோணமலை துறைமுகப் பகுதியில் உள்ள கப்பல்களுக்கு எரிபொருளை வழங்குவதற்காக திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை கட்ட இந்தியா திட்டமிட்டுள்ளதாக முதலிகே கூறியுள்ளார்.

திருகோணமலையில் 3071 ஏக்கர் நிலத்தை இந்தியாவுக்கு வழங்க தயாராகும் அரசாங்கம் | Govt Preparing Hand Over Land Trinco To India

மேலும், தற்போதைய திருகோணமலை மீனவ சமூகத்தினர் அந்தப் பகுதிகளிலிருந்து அகற்றப்பட்டு, இந்திய முதலீட்டாளர்களின் பொழுதுபோக்குக்காக அந்த மண்டலம் ஒதுக்கப்பட உள்ளதாகவும்  முதலிகே குற்றம் சுமத்தியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்