ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தொடர்பாக தான் தெரிவித்த அவதூறு கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி (Thissa Kuttiarachchi) தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் (Colombo District Court) இன்று (29) அவர் இந்த விடயத்தினை அறிவித்தார்.
10 பில்லியன் ரூபா இழப்பீடு கோரி அநுரகுமார திசாநாயக்க தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சுமுகமாக தீர்க்கப்பட்ட வழக்கு
இதன்போது திஸ்ஸ குட்டியாராச்சி தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்திற்கு இதனை அறிவித்தார்.

பின்னர், இரு தரப்பினரின் உடன்பாட்டுடன், வழக்கு சுமுகமாக தீர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

