அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பேட் கம்மின்ஸ் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் விளையாடுவது சந்தேகத்திற்கு இடமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மெல்பேர்னில் டிசம்பர் 26ஆம் திகதி நடைபெறவுள்ள இங்கிலாந்திற்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் (Boxing Day Test) அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பேட் கம்மின்ஸ் விளையாடுவது குறித்து கருத்து வெளியிட்ட அணி தேர்வுக்குழு இதனை தெரிவித்துள்ளது.
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் உபாதை காரணமாக கம்மின்ஸ் விளையாடவில்லை.
டெஸ்ட் போட்டி
எனினும், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு மொத்தமாக 6 விக்கெட்டுக்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்த வெற்றியுடன் ஆஷஸ் டெஸ்ட் தொடரினையும் 3-0 என அவுஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.
இன்னும் இரண்டு போட்டிகள் மீதமிருக்க பேட் கம்மின்ஸ் தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் அழுத்தம் குறைந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் அவர் அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் சிட்னியில் நடைபெறவிருக்கும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் பூரண உடற்தகுதியுடன் அணிக்கு திரும்புவார் என நம்பப்படுகின்றது.
இதேநேரம் அவுஸ்திரேலிய அணியின் முன்னணி சுழல்பந்துவீச்சாளரான நதன் லயனும், அடிலைட் டெஸ்டில் தசை உபாதைக்கு முகம் கொடுத்த நிலையில் அவரும் நான்காது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் நிலவுகின்றது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு இடம்பெறும் உலகக்கிண்ண t 20 தொடருக்கான தயார்படுத்தலில் அவுஸ்திரேலியா இறங்கியுள்ள நிலையில், கம்மின்ஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

