இந்தியா மற்றும், பாகிஸ்தான் இடையே நேற்று நடைபெற்ற ஆசியக் கோப்பை 2025 சூப்பர்4 போட்டியின் போது தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்ஹாரிஸ் ரவுஃப்புடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது ஓவரை ரவூஃப் வீசியபோது அபிஷேக் சர்மாவுடன் வாக்குவாதம் இடம்பெற்றது.
இது இறுதியில் நடுவர் கஜி சோஹேல் தலையிட வேண்டிய கட்டாயத்திற்கு குறித்த வாக்குவாதம் வழிவகுத்திருந்தது.
பரிச்சயமான காட்சி
இந்தியா, பாகிஸ்தான் போட்டிகளில் இந்தக் காட்சி ஓரளவு பரிச்சயமான ஒன்று.
இருப்பினும், இந்த ஆசியக் கோப்பையில் அணிகளுக்கு இடையே முந்தைய போட்டியில் இடம்பெற்ற சம்வங்களினால் குறித்த மோதல் எதிர்பார்க்கப்பட்டதாக அமைந்திருந்தது.
மேலும் இந்த ஆட்டத்தில் தனக்கு அதிரடியாக ஆட எதிரணி வீரர்களின் வார்த்தைகள் மற்றும் செயற்பாடுகள் காரணமாக அமைந்ததாக அபிஷேக் சர்மா தெரிவித்திருந்தமையும் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில் ஆசிய கிண்ண 2025 சுப்பர்4 சுற்று தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்திருந்தது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான குறித்த ஆட்டம் நேற்று டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.
குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி 20ஓவர் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்திய அணி
பாகிஸ்தான் அணி சார்பில் தொடக்க வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் 45 பந்துகளில் 58 ரன்கள் ஓட்டங்களையும், சைம் அயூப் 17 பந்துகளில் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
Abhishek Sharma abused Haris Rauf over 6-0 comment.
Now he is showing him who is the real father proud of you Abhishek 🔥pic.twitter.com/sVu2RGSK7e
— LUCIFER 🇲🇫 (@KohliHood) September 21, 2025
பந்து வீச்சில் இந்தியா சார்பில் ஷிவம் துபே நான்கு ஓவர்களில் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை பெற்றுக்கொடுத்தார்.
இதனை தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது.
குறித்த ஆட்டத்தில் அபிஷேக் சர்மாவின் துடுப்பாட்டத்தின் உதவியடன் இந்தியா இந்த வெற்றியிலக்கை அடைந்தமை குறிப்பிடத்தக்கது.