மிஷ்லின் 24 ஹவர்ஸ் துபாய் (Michelin 24H Dubai) கார் ரேஸ் பந்தயத்தில் அஜித்குமார் அவரது அஜித் குமார் ரேசிங் குழு சார்பில் கலந்து வருகின்றார்.
இந்த போட்டிக்கான தகுதி சுற்றே நேற்றையதினம் (10.01.2025) நடைபெற்றது.
இந்த போட்டியில் நடிகர் அஜித் குமார் ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கின்றார். இது அவரது ரேசிங் திறனை வெளிக்காட்டும் வகையில் அமைந்திருக்கின்றது.
மேலும், இந்த போட்டியின் இறுதியில் குறிப்பிடத்தக்க சாதனையை அவர் படைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அஜித், இந்த தகுதி சுற்றில் ஏழாவது இடத்தைப் பிடித்திருப்பது அவரது ரேஸ் குழுவை மட்டுமல்ல அவரது ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
2.03.476 நிமிடங்கள் என்கிற கால இடைவெளியில் இலக்கை அடைந்தே அவர் இந்த இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
https://www.youtube.com/embed/Q8ZHWw1im_M