பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலதிக மஹபொல கட்டணம் ஒன்றை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
நாடு முழுவதையும் பாதித்த சீரற்ற வானிலை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வழங்கப்படும் திகதி
இதற்கு முன்னர் கடந்த 28 ஆம் திகதியும் மஹபொல தவணைக்கட்டணம் ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக, வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள மஹபொல தவணைக்கட்டணத்தை எதிர்வரும் 05 ஆம் திகதி வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

