நீதி அமைச்சின் மேலதிக செயலாளராக யாழ்ப்பாணம் – உரும்பிராயைச் சேர்ந்த மதுமதி வசந்தகுமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறப்பு தரம்
அண்மையில் இலங்கை நிர்வாக சேவை அதி சிறப்பு தரத்தை பூர்த்தி செய்த
நிலையில், அவர் நீதி அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் உடுவில் பிரதேச செயலாளர், வடமாகாண கூட்டுறவு ஆணையாளர், உள்ளூராச்சி உதவி
ஆணையாளர் என பல பதவிகளை வகித்த நிலையில் இறுதியாக வடமாகாண தபால் மா அதிபராக
கடமை வகித்தார்.
இந்நிலையில் தற்போது நீதி அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்க
உள்ளமை குறிப்பிடத்தக்கது.

