விமான விபத்தை அடுத்து அகமதாபாத்தில் (Ahmedabad) விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு (London) இன்று பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட எயார் இந்தியா (India) விமானம் புறப்பட்டு சில நிமிடங்களிலேயே குடியிருப்பு பகுதியில் விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளானது.
குறித்த விமானத்தில் 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணித்துள்ளதாக தெரவிக்கப்பட்டது.
விமான விபத்து குறித்து இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்.
விமான சேவைகள்
மேலும், விமான விபத்து விழுந்து நொருங்கிய இடத்தில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

விமான விபத்தைத் தொடர்ந்து அகமதாபாத்தில் விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அகமதாபாத் சென்ற இண்டிகோ விமானம் மீண்டும் சென்னைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து அகமதாபாத் செல்லவிருந்த மூன்று விமானங்களின் சேவையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/TJKTnTqMu_s

