இந்தியாவின் (India) தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் (Ajit Doval) மற்றும் ரஷ்ய (Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் (Vladimir Putin) இடையில் சந்திப்போன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு கடந்த 12ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளிளியிட்டுள்ளன.
மோடிக்கு அழைப்பு
இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடியின் (Narendra Modi) உக்ரைன் பயணம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியா-ரஷியா இடையே இருதரப்பு நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஒக்டோபர் 22 முதல் 24 வரை நடக்க உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வரவேண்டும் என பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ரஷிய பயணத்தின்போது உக்ரைன் விவகாரம் குறித்து பிரதமர் மோடி, விளாடிமிர் புடினுடன் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.