தெல்தெனிய பொலிஸார், பேஸ்புக் விருந்து ஒன்றை சோதனையிட்டதில், போதைப்பொருளுடன் 22 ஆண்களும் நான்கு பெண்களும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
தெல்தெனிய பொலிஸ் பிரிவில் உள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் இந்த பேஸ்புக் விருந்து நடைபெற்றுள்ளது.
இந்நிலையில். இன்று (13) அதிகாலை குறித்த ஹோட்டலில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருட்கள்
சந்தேக நபர்கள் 4134 மில்லிகிராம் ஐஸ், 1875 மில்லிகிராம் ஹாஷ், 2769 மில்லிகிராம் குஷ், 390 மில்லிகிராம் கொக்கைன், 804 மில்லிகிராம் காளான், 13 மாத்திரைகள் மற்றும் 12 சட்டவிரோத சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த சந்தேகநபர்கள் கண்டி, முல்லேரியா, ஹட்டன், பிலாகல, அதுருகிரிய, கொட்டகெதர, ஹோமாகம, தொம்பே, எம்பிலிப்பிட்டிய, திருகோணமலை மற்றும் ஜா-எல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 18 முதல் 31 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், சந்தேக நபர்கள் இன்று தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளதுடன் சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

