இந்த மாதம் 29ஆம் திகதி க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று (27), நாளை (28) மற்றும் நாளை மறுநாள் (29) ஆகிய திகதிகளில் நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நடைபெறாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மாற்று திகதிகள் அறிவிப்பு
இதற்காக, டிசம்பர் 07, 08 மற்றும் 09 ஆகிய திகதிகள் மாற்று திகதிகளாக வழங்கப்பட்டுள்ளன.

மேலும் இன்று நடைபெறவிருந்த பரீட்சை டிசம்பர் 7 ஆம் திகதியும், நாளை (28) நடைபெறவிருந்த பரீட்சை டிசம்பர் 8 ஆம் திகதியும், சனிக்கிழமை (29) நடைபெறவிருந்த பரீட்சை டிசம்பர் 9 ஆம் திகதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

