களுத்துறையில் (Kalutara) உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற உயர்தரப் பரீட்சையில், வினாத்தாளில் அரசியல் கட்சியொன்று தொடர்பாக ஐந்து கேள்விகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி பணிப்புரையை உரிய அதிகாரிகளுக்கு
கல்வி அமைச்சு (Ministry of Education) விடுத்துள்ளது.
குறித்த பாடசாலையில் தயாரிக்கப்பட்ட உயர்தர மாணவர்களுக்கான இரண்டாம் தவணை பரீட்சைக்கான வினாத்தாளில் அரசியல் கட்சியொன்றை சார்ந்த உள்ளடக்கம் இருந்துள்ளது.
கல்வி அமைச்சு பணிப்புரை
இந்தநிலையில், குறித்த கேள்விகள் ஒரு அரசியல் கட்சியை சுட்டிக்காட்டுவதாக இருந்துள்ளது.
இதனடிப்படையில், இவ்விடயம் சர்ச்சையைத் தூண்டிய நிலையில் கல்வி அமைச்சால் குறித்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலைமையை மதிப்பிடுவதற்கு முறையான விசாரணை நடத்தப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.