விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில், கடவுச்சீட்டில் சிங்களப் பெயரினைக் கொண்ட அமெரிக்கப் பிரஜை ஒருவரை இலங்கை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த அமெரிக்கப் பிரஜை கடந்த 16 மாதங்களாகவே விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்துள்ளார்.
கண்டி தலைமைப் பொலிஸ் காரியாலயத்தின் சுற்றுலாப் பிரிவு அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
சிங்களப் பெயர்
குறித்த அமெரிக்கப் பிரஜை கண்டியில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தங்கயிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, கைதான நபரின் விசா காலம் கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபரின் கடவுச்சீட்டில் ஆரியரட்ன சஞ்சீவ சேனக்க ஆரியரட்ன என பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த நபர் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த மடிக்கணினி அடிக்கடி பயன்படுத்தி வந்தார் என ஹோட்டல் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.