Courtesy: Sivaa Mayuri
குளோபல் யுகிராட் (Global UGrad) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இளங்கலை பட்டதாரிகளுக்கு முழு நிதியுதவியுடன் கூடிய புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
இந்த உதவித்தொகை மாணவர்கள் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் ஒரு செமஸ்டர் (6 மாதங்கள்) காலத்தை செலவழிக்க வாய்ப்பளிக்கும் என்றும் அமெரிக்க தூதகரம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், சட்டம், பொறியியல் அல்லது இடையில் ஏதாவது படிக்கும் இலங்கை இளங்கலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்படுவதாக அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது.
குளோபல் யுகிராட் திட்டம்
குளோபல் யுகிராட் திட்டத்தின் கீழ் முழு நிதியுதவி பெறும் உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் 2024 டிசம்பர் 15ஆம் திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.