Courtesy: Sivaa Mayuri
அமெரிக்காவில் (America) கடந்த வெள்ளிக்கிழமை 2.95 மில்லியன் விமான பயணிகள் தமது பயணங்களை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்காவின் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுவரையில் ஒரே நாளில் விமானப்பயணங்களை மேற்கொண்டவர்களில் இதுவே அதிக எண்ணிக்கையாகும் என்று போக்குவரத்து நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
தினசரி விமானங்கள்
கோடை காலத்தின் ஆரம்பம் மற்றும் வார இறுதி என்பதன் காரணமாகவே இந்த சாதனை எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது கடந்த ஆண்டை விட 6.3 வீத அதிகரிப்பாக காணப்படுகிறது.
இந்தநிலையில் கோடைக் காலத்தில் 26,000 க்கும் மேற்பட்ட தினசரி விமானங்களை சேவையில் ஈடுபடுத்த அமெரிக்க போக்குவரத்து நிர்வாகம் தீர்மானித்துள்ளது.