இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) அண்மையில் சீன(China) விஜயத்தை முடித்து விட்டு நாடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், இதன் பின்னரான நாட்களில் அநுரகுமார திசாநாயக்க எடுக்கப்போகும் முடிவுகள் இந்தியாவிற்கு ஆபத்தாக முடியலாம் என பிரித்தானியாவிலிருக்கும் இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தை தொடர்ந்து, இலங்கை மற்றும் சீனாவிற்கிடையிலான உறவுகள் மிக நெருக்கமானதாக காணப்படுகின்றது.
சீனாவிற்கு எதிரான சக்திகளை இலங்கையில் தாங்கள் அனுமதிக்க போவதில்லையென அநுரகுமார திசாநாயக்கவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறே இந்திய விஜயத்தின் போது இந்தியாவிற்கு எதிரான சக்திகளை இலங்கையில்
அனுமதிக்க மாட்டோம் என்றார்.
இலங்கையின் தற்போதைய நிலையில் இந்தியா ஏதாவதொரு தந்திரோபாயத்தை முன்னெடுக்கும்”என குறிப்பிட்டுள்ளார்.