கடந்த கால அரசாங்கங்களின் திட்டமிடல் மற்றும் எதிர்பாராத வேலைத்திட்டங்களே மின்வெட்டுக்கு காரணம் என எரிசக்தி அமைச்சர் குமார் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
பாணந்துறை மின் இணைப்பு துணை மின்நிலையத்தில் குரங்கு மோதியதால் நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது.
இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சமநிலையை பேணுவதற்கு கடந்த காலங்களில் எந்த திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மோசமான வழிகாட்டல்கள்
தேசிய மின்சார அமைப்பின் ஸ்திரத்தன்மையை பேணுவதில் முன்னைய அரசாங்கங்கள் போதியளவு கவனம் செலுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முன்னைய அரசாங்கங்கள் தொழில்நுட்பம் பற்றிய புரிதல் இல்லாமல் இருந்ததாகவும் மோசமான வழிகாட்டல்களை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுபோன்ற நிலைமைகள் குறித்து விரிவாக ஆராய்ந்து இனிவரும் காலங்களில் இவ்வாறு நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.