அரகலய போராட்டத்தின் போது எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பொதுமக்களாலேயே தாக்கப்பட்டார் என தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளரான ஐன்ஸ்டீன் தெரிவித்தார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர், “அரகலய போராட்டத்தின் போது தமது கட்சி தலைவரான அநுரவின் பாதுகாப்பை கட்சி ஆதரவாளர்களும் உறுப்பினர்களும் உறுதிபடுத்தியிருந்தார்கள்.
ஆனால், அவ்விடத்திற்கு வந்திருந்த சஜித் பிரேமதாச, இவ்வாறான ஒரு உறுதிப்பாடு இல்லாது வந்த நிலையில் அங்கு கோபப்பட்டு இருந்த மக்கள் அவரை தாக்கினார்களே தவிர, அவர் தாக்கப்பட்டது ஒரு கட்சி சார்பிலானது என்பது அப்பட்டமான பொய்” என சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அவர் மேலும் தெரிவித்த விடயங்களுடன் வருகின்றது பின்வரும் காணொளி,