தேவி (Devi) திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த சோனு சூட்(Sonu Sood) என்பவரை கைது செய்ய பஞ்சாப் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழ் சினிமாவில் பிரபலமாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சோனு சூட், பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் கண்ணா என்பவரிடம் 10 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றில் முன்னிலையாகுமாறு வலியுறுத்தி பல தடவைகள் அவருக்கு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக வில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்ற உத்தரவு
இதன் காரணமாக, அவரை கைது செய்யுமாறு பஞ்சாப் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.