நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இன்று இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முன்னிலை
இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த ஒரு வழக்கில் நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இலங்கையில், அண்மைக்காலமாக பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பெதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்சவிற்கு எதிராக நீதிமன்றம் இவ்வாறான ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.