கிளப் வசந்த என்ற வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் உட்பட 07 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கடுவலை நீதவான் நீதிமன்றில் இன்று மாலை முன்னிலைபடுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (08) அத்துருகிரிய பிரதேசத்தில் பச்சை குத்தும் நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போது அடையாளம் தெரியாத இருவரினால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டடிருந்தது.
பொலிஸார் வெளியிட்ட தகவல்
இந்த துப்பாக்கிச்சூட்டில் கிளப் வசந்த உள்ளிட்ட மேலும் ஒருவர் உயிரிழந்ததுடன், கிளப் வசந்தவின் மனைவி மற்றும் பாடகி சுஜீவா உள்ளிட்ட சிலர் படுகாயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது பிரபல பாடகர் கே. சுஜீவாவின் கணவரான நயன வசுலாவும் உயிரிழந்துள்ளதுடன், கே.சுஜீவா, கிளப் வசந்தவின் மனைவி, மற்றுமொரு பெண்ணும், ஆணும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பச்சை குத்தும் நிலைய உரிமையாளரின் மனைவி சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுகேகொட பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவரது நுரையீரலில் குண்டு ஒன்று பதிவாகி இருப்பதாகவும், அதை அகற்றினால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.