முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மத்திய கிழக்கை நடு நடுங்க வைத்த US – B2 போர் விமானங்கள்.. உலகின் அதிசய யுத்தக்கருவி!

நோர்த்ரோப் B-2 ஸ்பிரிட் (B-2 Spirit) என அழைக்கப்படும் ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானம், உலகிலேயே அதிநவீன திறன் கொண்ட ஒரு யுத்தக்கருவியாக கருதப்படுகின்றது. 

அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட இந்த போர் விமானம், எதிரியின் மிகவும் கடுமையான பாதுகாப்பு அமைப்புகளைச் சமாளிக்கவும், அணு ஆயுதங்களுடன் கூடிய பாரிய தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

நோர்த்ரோப் கன்மேன் (Northrop Grumman) என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட B-2 Spirit, 1989ஆம் ஆண்டு தனது முதலாவது விமானப் பறப்பை மேற்கொண்டது, அதாவது வானில் முதல் தடவையாக இயக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து, 1997ஆம் ஆண்டு அமெரிக்காவின் பாதுகாப்பு படைகளில் ஒன்றான வான்படையில் அதிகாரப்பூர்வமாக, ஒரு முக்கிய அதிசிறந்த போர்க்கருவியாக அங்கீகரிக்கப்பட்டது. 

பறவை போன்ற வடிவமைப்பு 

B-2 விமானங்கள் மிகவும் நுட்பமான ஸ்டெல்த் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை. இது எதிரியின் ரேடார் கண்காணிப்புகளுக்கு புலப்படாமல் பறக்கக் கூடிய தன்மையைக் கொண்டுள்ளது.

மத்திய கிழக்கை நடு நடுங்க வைத்த US - B2 போர் விமானங்கள்.. உலகின் அதிசய யுத்தக்கருவி! | B 2 Stealth Bomber Aircraft Middle East

பொதுவாகவே, ஒரு விசித்திரமான இயந்திர பறவை போன்ற அமைப்பை கொண்ட இவ்விமானங்கள், தாக்குதல்களில் இருந்து தப்பிக்கும் திறனை அதிகம் கொண்டுள்ளன என்று கூறப்படுகின்றது. 

இவ்விமானங்களில் ஒரு விமானி மற்றும் ஒரு மிஷன் கட்டுப்பாட்டாளர் என 2 பயணிகள் மாத்திரமே பயணிக்க முடியும். அத்துடன், அவை 69 அடி நீளமும் 172 அடி இறக்கை அகலமும் கொண்டுள்ளன. இவ்விமானங்களால் அதிகபட்சமாக 1010 கிமீ/ம (Mach 0.95) வேகத்தில் இயங்க முடியும். 

அனைத்திலும் பார்க்க B-2 விமானங்களின் சிறப்பம்சம், அவை ரேடார்களுக்கு புலப்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை தான். ஏனைய விமானங்களை போல அவை ரேடார் அலைகளில் சிக்கிக் கொள்வதில்லை. 

அதிநவீன திறன் 

1970களின் நடுப்பகுதியில், இராணுவ விமான வடிவமைப்பாளர்கள் ஏவுகணைகள் மற்றும் இடைமறிப்பான்களைத் தவிர்ப்பதற்கான ஒரு புதிய முறையைக் கண்டுபிடித்தனர். 

அது இன்று ” ஸ்டெல்த் ” என்று அழைக்கப்படுகிறது. ரேடார் சிக்னல்களைத் திசைதிருப்பும் அல்லது உறிஞ்சும் ஒரு விமானச் சட்டகத்துடன் கூடிய விமானத்தை உருவாக்குவதே இதன் கருத்தாகும், இதனால் ரேடார் அலகுக்கு சிறிதளவு கூட பிரதிபலிக்காத திறன் இருக்கும். 

மத்திய கிழக்கை நடு நடுங்க வைத்த US - B2 போர் விமானங்கள்.. உலகின் அதிசய யுத்தக்கருவி! | B 2 Stealth Bomber Aircraft Middle East

ரேடார் மிகவும் இரகசியத் தன்மை கொண்ட பண்புகளை உடைய ஒரு கருவி. கிட்டத்தட்ட கண்டறியப்படாமல் பறக்க முடியும், மேலும் ரேடாரை நம்பியிருக்காத ஆயுதங்கள் மற்றும் அமைப்புகளால் மட்டுமே தாக்க முடியும்.

1974ஆம் ஆண்டில், DARPA , அமெரிக்க விமான நிறுவனங்களிடமிருந்து, ரேடார்களுக்குத் தெரியாமல் இருக்கும் ஒரு விமானத்தின் மிகப்பெரிய ரேடார் குறுக்குவெட்டு பற்றிய தகவல்களைக் கோரியது.

ஆரம்பத்தில், நார்த்ரோப் மற்றும் மெக்டோனல் டக்ளஸ் ஆகியன மேலும் மேம்பாட்டிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. லாக்ஹீட் A-12 மற்றும் SR-71 ஆகியவற்றின் வளர்ச்சியில் இந்தத் துறையில் அனுபவம் பெற்றது. 

ரேடார் பிரதிபலிப்பு

இந்நிலையில், குறித்த விமானங்களில் சேகரிக்கப்பட்ட தரவு முகம் கொண்ட விமானத்தின் வடிவமைப்பை இயக்கும் தட்டையான மேற்பரப்புகளிலிருந்து ரேடார் பிரதிபலிப்புகளைக் கணிக்கப் பயன்படுத்தப்படும் கணினி மாதிரிகளை அறிமுகப்படுத்துவது ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.

இவற்றில், Fly-by-wire இயக்க அமைப்பு, Defensive Management System (DMS) செட்லைட் தொடர்புகள், நவீன புள்ளி தாக்குதல், வழிகாட்டிகள்

தரையில் மிகக்கிடையாக பறக்கும் இயங்கு வழிகாட்டு முறை போன்றன உள்ளன. 

மத்திய கிழக்கை நடு நடுங்க வைத்த US - B2 போர் விமானங்கள்.. உலகின் அதிசய யுத்தக்கருவி! | B 2 Stealth Bomber Aircraft Middle East

அதேவேளை, நோர்த்ரோப் B-2 ஸ்பிரிட் விமானங்களில் எந்தவொரு ஆயுதமும் வெளிப்பகுதியில் வைக்கப்படுவதில்லை. அவை அனைத்தும் விமானத்தின் உற்பகுதிக்குள் பதுக்கி வைக்கப்படுகின்றன. 

குறிப்பாக, B-2 ஸ்பிரிட், USAF இன் முக்கிய ஊடுருவல் பணிகளை மேற்கொள்ள உருவாக்கப்பட்டது, இது எதிரி பிரதேசத்திற்குள் ஆழமாக பயணித்து, அணு ஆயுதங்களை உள்ளடக்கிய ஆயுதங்களை நிலைநிறுத்த அனுமதிக்கிறது .

ஈரான் மீதான தாக்குதல் 

அதேவேளை, ஒரு B-2 ஸ்பிரிட் விமானத்தில் JDAM, Mark 82 மற்றும் Mark 84 குண்டுகள், MOP (Massive Ordnance Penetrator), CBU-87 / CBU-97 கிளஸ்டர் குண்டுகள், B61 அணுக்குண்டுகள்,  B83 அணுக்குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கும். 

அனைத்து ஆயுதங்களும் உள் ஆயுதக் கூடங்களில் பதுக்கப்பட்டிருக்கும் – இது ஸ்டெல்த் தன்மையை பாதுகாக்க உதவுகிறது. ஒரு விமானத்தின் அதிகபட்ச ஆயுத எடை 40,000 பவுண்டுகள், அதாவது 18,144 கிலோ ஆகும். 

மத்திய கிழக்கை நடு நடுங்க வைத்த US - B2 போர் விமானங்கள்.. உலகின் அதிசய யுத்தக்கருவி! | B 2 Stealth Bomber Aircraft Middle East

இந்நிலையில், குறித்த அதிசக்தி விமானங்களை கொண்டு கடந்த வாரம், அமெரிக்கா ஈரானின் முக்கிய மூன்று அணுசக்தி தளங்களை தாக்கி அழித்தது. 

ஈரானின் அணுசக்தி உற்பத்திக்கு இன்றியமையாததாக இருக்கும் தெஹ்ரானுக்கு வெளியே ஒரு மலைக்கு அடியில் ஆழமாக புதைக்கப்பட்ட அணுசக்தி செறிவூட்டல் நிலையமான ஃபோர்டோ தளத்தில் பதினான்கு GBU-57 பாரிய ஆயுத ஊடுருவிகளை (MOPs) அமெரிக்கா வீசியது. 

அமெரிக்கா மட்டுமே இந்த மிகப்பெரிய பங்கர் பஸ்டர் குண்டுகளை இயக்குகிறது, இவை மறைந்திருக்கும் இடத்தை அடையக்கூடிய ஒரே ஆயுதங்கள்.

இந்த குண்டுகள் 13,000 கிலோ (30,000 பவுண்டு) எடையுள்ளவை மற்றும் வெடிப்பதற்கு முன்பு 18 மீ (60 அடி) கான்கிரீட் அல்லது 61 மீ (200 அடி) பூமியை ஊடுருவிச் செல்லும் திறன் கொண்டவை என தரவுகள் தெரிவிக்கின்றன. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.