ரி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் (Pakistan), அமெரிக்கா (United States) அணிகள் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 159 ஓட்டங்கள் எடுத்தது.
அணித்தலைவர் பாபர் அசாம் (Babar Azam) 44 ஓட்டங்கள், ஷதாப் கான் (Shadab Khan) 40 ஓட்டங்களும் எடுத்தனர்.
வைரலான இளவயது வேகப்பந்து வீச்சாளர் காணொளி : முன்னாள் நட்சத்திர வீரர் விடுத்துள்ள கோரிக்கை
அபார வெற்றி
அடுத்து ஆடிய அமெரிக்கா 20 ஓவரில் 159 ஓட்டங்கள் எடுக்க, ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்று சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி அமெரிக்கா அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் பாபர் அசாம் 44 ஓட்டங்களை எடுத்து, ரி20 கிரிக்கெட்டில் இதுவரை 4,067 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
இதன்மூலம் சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற விராட் கோலியின் (Virat Kohli) சாதனையை தகர்த்து, புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் 4,067 ஓட்டங்களுடன் பாபர் அசாமும், 2-வது இடத்தில் 4,038 ஓட்டங்களுடன் விராட் கோலியும், 3-வது இடத்தில் 4,026 ஓட்டங்களுடன் ரோகித் சர்மாவும் (Rohit Sharma) உள்ளனர்.
அங்கீகரிக்கபடாத நாடுகளின் மாபெரும் உதைபந்தாட்ட போட்டி: பங்கேற்கும் தமிழீழ மகளிர் அணி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |