முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நுவரெலியாவில் சடலமாக மீட்கப்பட்ட சிசு: பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி

நுவரெலியா – லிந்துலை, என்போல்ட் தோட்டத்தில் எல்.ஜி. பிரிவில் சடலமாக மீட்கப்பட்ட சிசு,
பிறந்த கையோடு வயரொன்றில் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட
பிரேத பரிசோதனையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

குறித்த தோட்டத்தில் வீடொன்றுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் இருந்தே கடந்த 10 ஆம் திகதி சிசுவின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

பொலிஸ் விசாரணை

இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய முச்சக்கரவண்டியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது, மாவனல்லை பகுதியில் இருந்து தமது தோட்டத்துக்கு வந்திருந்த
பெண்ணொருவரின் பையே அது என அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய 24 வயதான குறித்த பெண் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தியதில்,  தனக்கும்,
குறித்த முச்சக்கரவண்டி சாரதிக்கும் இடையில் இருந்த தகாத உறவு காரணமாகவே குழந்தை
பிறந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியாவில் சடலமாக மீட்கப்பட்ட சிசு: பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி | Baby Found Dead In Nuwara Eliya

அத்துடன், மாவனல்லை பகுதியில் தான் வேலை செய்யும் வீட்டில் வைத்து கடந்த 5 ஆம் திகதி
குழந்தை பிறந்துள்ளதாகவும், தனது சகோதரியின் உதவியுடன் குழந்தையின் கழுத்தை
நெறித்து கொலை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சடலத்தை புதைப்பதற்காகவே முச்சக்கரவண்டியில் அதனை அக்கரபத்தனை பகுதிக்கு
எடுத்துவந்ததாகவும் பொலிஸாரிடம் அந்த பெண் வாக்குமூலமளித்துள்ளார்.

அதிகாலை வேளையில், சடலத்தை அடக்கம் செய்வதற்கு திட்டமிட்டிருந்ததாகவும்,
அதற்குள் சடலத்தை தாய் கண்டு அயலவர்களுக்கு தகவல் வழங்கியதால் அதனை
செய்யமுடியாமல் போனதாகவும் முச்சக்கரவண்டி சாரதி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

நுவரெலியாவில் சடலமாக மீட்கப்பட்ட சிசு: பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி | Baby Found Dead In Nuwara Eliya

இந்நிலையி்ல், கைது செய்யப்பட்டுள்ள பெண் பொலிஸ் பாதுகாப்புடன் நுவரெலியா வைத்தியசாலையில்
சிகிச்சைப்பெற்று வருவதுடன்  சந்தேக நபர்களான பெண்ணையும், முச்சக்கரவண்டி சாரதியையும்
(12) இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு பொலிஸார்
நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, சந்தேக நபரான பெண்ணின் சகோதரியையும் கைது செய்வதற்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை
பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.