முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புளியம்பொக்கனை ஆலய வீதியின் மோசமான நிலை: திருத்தக் கோரும் ஆர்வலர்கள்

Courtesy: uky(ஊகி)

கிளிநொச்சி -புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்திற்குச் செல்லும் பிரதான வீதி பயணங்களை மேற்கொள்ளும்போது அசௌகரியத்தினை ஏற்படுத்தும்படி மோசமாக சேதமடைந்துள்ளது.

ஆலயத்தில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு இந்த மோசமான நிலைமை இருப்பதனை அவதானிக்கலாம்.

அதிகளவிலான பக்தர்களின் வருகையைக் கொண்ட இந்த ஆலயம் செப்பனிடப்பட்ட நேர்த்தியான பாதையினை கொண்டிருக்காதது கவலைக்குரிய விடயமாகும்.

பாதையினை விரைவாக செப்பனிட்டு பக்தர்களின் பயணங்களை இலகுவாக்கி கொடுப்பது வரவேற்கப்படத்தக்க செயற்பாடாகும் என அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

பாதையின் நிலை 

பரந்தன் புதுக்குடியிருப்பு (A35) வீதியில் பரந்தன் சந்தியில் இருந்து 11 கிலோமீற்றர் தூரத்தினையும் புளியம்பொக்கனைச் சந்தியில் இருந்து கிழக்கே நான்கு கிலோமீற்றர் தூரத்திலும் புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயம் அமைந்துள்ளது.

புளியம்பொக்கனை ஆலய வீதியின் மோசமான நிலை: திருத்தக் கோரும் ஆர்வலர்கள் | Bad Condition Of Road Unmaintained

புளியம்பொக்கனைச் சந்தியில் இருந்து ஆலயத்திற்கு உள்ள நான்கு கிலோமீற்றர் தூரத்தில் இறுதி ஒரு கிலோமீற்றர் தூரமான பகுதியே மோசமாக சேதமடைந்துள்ளது.
.

பாதையில் பல இடங்களில் குழிகள் தோன்றியுள்ளன.இன்னும் சில இடங்களில் வாகனத்தடங்களில் பாதை அள்ளுப்பட்டு குன்றும் குழியுமாக இருக்கின்றது.

இதனால் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் தங்களது வாகனங்களில் பயணிக்கும் போது அதிக சிரமங்களுக்குள்ளாவதை அவதானிக்க முடிகின்றது.

மக்களின் ஆதங்கம்

அதிகளவிலான மக்கள் கூடி வந்து வழிபடும் புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்திற்கு செல்லும் வீதியின் அகலம் அதிகளவிலான பக்தர்களின் பயணத்திற்கு போதியளவிலானதாக இல்லை.

புளியம்பொக்கனை ஆலய வீதியின் மோசமான நிலை: திருத்தக் கோரும் ஆர்வலர்கள் | Bad Condition Of Road Unmaintained

திருவிழாக் காலங்களில் அதிக வாகன நெரிசலை ஏற்படுத்தி விடுகின்றது.
புளியம்பொக்கனைச் சந்தியில் இருந்து ஆலயம் வரையிலான நான்கு கிலோமீற்றர் வீதியும் இப்போதுள்ளதிலும் பார்க்க அகலமாக்கப்பட வேண்டும்.

இறுதி ஒரு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள குன்றும் குழியுமான பகுதியும் தாரிடப்படாத கருங்கல் சல்லியை நிரவிய தோற்றத்தினை கொண்டுள்ள மற்றொரு பகுதியுமாக நிச்சயம் செப்பனிட்டே ஆக வேண்டிய பாதையையும் கொண்டதாக புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்திற்குச் செல்லும் பிரதான வீதி இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பல உள்ளூர் வீதிகள் செப்பனிட்டு காபைட்டாக மாற்றப்பட்டு வரும் இவ்வேளையில் புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய வீதி மட்டும் கவனிப்பாரற்று கிடப்பதாக மக்கள் தங்கள் ஆதங்கத்தினையும் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

புனரமைப்பு தேவை 

ஆலயங்களுக்கான வீதிகளும் உள்ளூர் வீதிகளைப்போல் புனரமைப்பு செய்யப்பட்டு காபைட்டாக மாற்றியமைக்கப்படும் போது ஆலயங்களுக்குச் சென்று வரும் பயணங்கள் நல்ல நினைவுகளை ஏற்படுத்தி விடுவதோடு மன அமைதிக்கும் வழிகோலுவதாக இருக்கும்.

புளியம்பொக்கனை ஆலய வீதியின் மோசமான நிலை: திருத்தக் கோரும் ஆர்வலர்கள் | Bad Condition Of Road Unmaintained

பயணங்களை அதிக சிரமங்களோடு பயணிப்பதிலும் பார்க்க அமைதியான இலகுவான பயணங்களாக இருக்கும் எனின் ஆலய வழிபாட்டினால் கிடைக்கும் மன அமைதியும் திருப்தியடையும் உணர்வும் அதிகமாக இருக்கும் என உளவள ஆலோசகர் ஒருவருடன் ஆலயங்களுக்கான வீதிகளில் நிகழும் மோசமான பயணங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றிய கேட்டலின் போது அவர் குறிப்பிட்டிருந்தார்.

வீதியபிவிருத்தி திணைக்களம் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளிட்ட மாவட்ட மட்ட அதிகாரிகள் என அனைவரும் ஒருமித்து ஆலயங்களிற்கு செல்லும் பாதைகளின் வழியே ஆரோக்கியமான பயணங்களை செய்வதற்கேற்றால் போல் காபைற்பாதைகளாக அவற்றை மாற்றியமைக்க வேண்டும் என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.