கொழும்பு, உலக வர்த்தக மைய அலுவலகங்களிலிருந்து மடிக்கணினிகளைத் திருடியதாக
கூறப்படும் ‘பெட்மேன்’ எனப்படும் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே அவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.
அவர் தாம் திருடிய அலுவலகங்களின் சுவர்களில் “பெட்மேன்” என்று எழுதிச்
சென்றதாக தெரிவிக்கப்படுள்ளது.

புனைப்பெயர்
இதன்படி, அவர் தாம் குற்றம் புரிந்த இடங்களில், பெட்மேன் என்ற தனது
புனைப்பெயரை எழுதிச் செல்லும் தனித்துவமான முறையை வெளிப்படுத்தியிருந்ததாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

